search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனை"

    • கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    பிடிப்பட்டவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடியில் ஒரு வீட்டின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் கோகுல் (25) என்பதும் வீட்டு அருகே சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் தாளவாடி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி அண்ணா நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

    சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மாது (19) என்று தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் என்கிற ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொ ண்டனர்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதிகளில் கஞ்சா விற்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீ. கூட்டு ரோட்டில் இருந்து சின்னசேலம் செல்லும் சர்வீஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பு ரோஸ் (வயது 25), வேல்முருகன் மகன் நவீன் ராஜ் (18) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
    • போலீசார் 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.

    இளைய சமுதாயத்தை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனை செய்பவர்களை பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் தலைமையிலான போலீசார் முஜாஹிர், சுரேந்தர் ஆகியோர் கட்டபெட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகாரை சேர்ந்த கஞ்சன்குமார் என்பதும், பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

    கஞ்சன்குமார் பீகாரில் இருந்து கோத்தகிரிக்கு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிய வந்துள்ளார். இங்கு அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை. இதனால் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டார். இதையறிந்த பீகாரைச் சேர்ந்த அவரது நண்பரான பங்கஜ் குமார், ஊருக்கு சென்று விட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அந்த கஞ்சாவை கஞ்சன்குமாரிடம் கொடுத்து விற்கச் சொல்லியுள்ளார். அவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது தான் போலீசாரிடம் கஞ்சன்குமார் சிக்கிக் கொண்டார்.

    போலீசார் கஞ்சன்குமாரையும், பங்கஜ்குமாரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடத்தில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடி பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்த னர்.

    • கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர்
    • அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் நேற்று போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை கும்பலை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகரில் நேற்று போலீசார் கஞ்சா விற்பனையை ஒழிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரத்தினபுரி, செல்வபுரம், குனியமுத்தூர், சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த ரத்தினபுரி சம்பத் நகர் சூர்யபிரகாஷ்(23), செல்வபுரம் கீரைத்தோட்டத்தை சேர்ந்த சரவணன்(40), தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவை கல்லூரி மாணவர் மாதேஷ் குமார்(19) உள்ளிட்ட 10 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை விவேகா னந்தர் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வாலாஜா போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஹேமந்த்குமார் (வயது 31). என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது.

    அவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அதனை இருசக்கர வாகனத்தில் வைத்து வாலாஜா அடுத்த சாத் தம்பாக்கம் கிராம ஏரிக்கரை யோரம் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.

    பின்னர் ஹேமந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னம்பேடு ஊராட்சி, அய்யனார் மேடு பஸ் நிறுத்தம் அருகே சிறுவன் கைது செய்யப்பட்டான்
    • சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சி

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சின்னம்பேடு ஊராட்சி, அய்யனார் மேடு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவன் சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய நின்று கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டான். எனவே, போலீசார் அந்த சிறுவனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 500 கிராம் பறிமுதல்
    • ேபாலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பஸ்நிலையத்தில் பட்ட பகலிலேயே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

    அப்போது, கையில் பேக்குடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில், சுமார் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    அதேபோல், கிடங்கு தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபரும் சுமார் 250 கிராம் கஞ்சாவுடன் இருந்தது தெரியவந்தது.

    இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடுகத்தூர் அடுத்த அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி(வயது 39), அஜித்குமார்(23), என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒடுகத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • மேல்மலையனூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • 60 கிராம் கஞ்சாவை யும் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே நெகனூர் கிராமத்தில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வ நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி யான நபர் நின்று கொண்டி ருந்தார். போலீசார் அந்த நபரை விசாரித்தபோது சிறுகடம்பூர், மேட்டுப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் முருகன் (19) என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரைகைது செய்து 60 கிராம் கஞ்சாவை யும் பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதிகளில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட2வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் ஆசாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ். பி.பார்த்திபன் மேற்பார்வை யில்தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதிகளில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆசாகுளம் குடிசை பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸ் நிலையம்அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆசாகுளம் செந்தில் குமார் மகன் ஞானவேல் (19), விழுப்புரம் சித்தேரிக்கரை பாலு மகன் ஸ்ரீதர் (20) என்பது தெரிய வந்தது. அவர்கள் 350கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை க்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்துவழக்கு பதிவு செய்து 2 பேைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    குன்றத்தூர்:

    வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே உள்ள குப்பைமேடு அருகே உள்ள சுடுகாட்டில் சிலர் அமர்ந்து மதுகுடித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் பிடிபட்டவர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாலாஜி என்ற காக்கா பாலாஜி (24), யுவராஜ் (25), தாமோதர பெருமாள் (23) என்பது தெரியவந்தது.

    இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் வைத்து போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க சுடுகாட்டில் வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    • மதுரையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    தல்லாகுளம் போலீசார் ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே ரோந்து சென்றனர். இளையோர் விடுதி அருகே மோட்டார் சைக்கிளில் 3பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.150 கிலோ கஞ்சா, ரூ.31 ஆயிரத்து 200, மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் மேற்கண்ட இருவரும் வலையப்பட்டி தவமுருகன் மகன் கார்த்திகேயன் என்ற கவுதம் கார்த்திக் (22), ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் ராஜா தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் பாரி ஆனந்தன் (22) என்பது தெரியவந்தது. 2பேரையும் கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஆனையூர் சாந்தி நகரை சேர்ந்த ஜாக்ஆலிவரை தேடி வருகின்றனர்.

    கரிமேடு போலீசார் காளவாசல் பகுதியில் ரோந்து சென்றனர். ராஜீவ் காந்தி தெருவில் கஞ்சா விற்பது தெரியவந்தது. அங்கு பாண்டி என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். பாத்ரூம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நேதாஜிரோடு கிளாஸ்கார தெருவை சேர்ந்த ஜானகிராமன்(57) என்பவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய சிவகுமார் மனைவி ஆனந்தியை தேடி வருகின்றனர்.

    • பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சாவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


    கடலூா:

    சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை உதவியாளர் நாகராஜ் மற்றும் போலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் சிதம்பரம் தொப்பையான் தெருவில் வசிக்கும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (வயது 19), மற்றும் ஒமக்குளம் ஜமால்நகர் முஸ்தபா(எ)சுல்தான் (22 ), சீர்காழி ராதா நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (20), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட 3 பேரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×